ராஜேந்திர சோழரின் கல்வெட்டு ஒன்று கூட கங்கைகொண்ட சோழபுரத்தில் இல்லை..! அறிவீரா..?

ஆம் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை ராஜேந்திரர் கட்டினார் என்று நாம் அறிவோம். ஆனால் அக்கோயிலை அவர் தான் கட்டினார் என்பதற்கு அக்கோயிலில் ஒரு கல்வெட்டு சான்றும் இல்லை. செப்பேடுகள் மற்றும் பிற கல்வெட்டுகள் வாயிலாகவே கங்கைகொண்ட சோழபுரம் பற்றியும், அக்கோயிலை அவர் கட்டினார் என்பதையும் கண்டறிந்தோம்.

கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயிலில் கிடைக்கும் பழைய கல்வெட்டு இராஜேந்திர சோழரின் திருமகனார் வீர ராஜேந்திர சோழருடையதே!

இக்கல்வெட்டின் தனது தந்தையை பூர்வதேசமும் கங்கையும் கடாரமும்கொண்ட ஐய்யர் என்று குறிப்பிட்டு இருப்பார். (இங்கு ஐய்யர் என்பது ஐயா, ஐயன், ஐயர் என்ற பொருளில் தந்தையை குறிக்கும்)

இக்கல்வெட்டு ஆணையை வீர ராஜேந்திரர் காஞ்சிபுரத்தில் இருந்த அரண்மனையில் இருந்து கொடுத்துள்ளார்.

Like this article?

Share on Facebook
Share on Twitter
Share on Linkdin
Share on Pinterest

Leave a comment