நாட்டு நலபணிதிட்ட மாணவர்களுக்கு கல்வெட்டு வகுப்பு

தமிழர் வரலாற்றை நமது இளைய தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற தொண்டில் இன்னொரு படியாக நேற்றைய நாள் கும்பகோணத்தில் 4 பள்ளிகள் சேர்ந்து நடத்திய NSS முகாமில் தொடக்க நாளில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலான குடந்தை கீழ்கோட்டத்தில் ஒரு இலவச கல்வெட்டு வாசிப்பு பயிற்சி மற்றும் தொல்லியல் விழிப்புணர்வு முகாமை உலகளாவிய இளந்தமிழர் குழு சார்பாக NSS உடன் நடத்தினோம்!

பாணாதுறை மேல்நிலைப்பள்ளி, சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி, நகர மேல்நிலைப்பள்ளி, நேட்டிவ் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் இருந்து 120 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எழுத்துகள் வரலாறு, கல்வெட்டுகளின் அடிப்படை, கல்வெட்டு வாசித்தல், தொல்லியல் எச்சங்களை பாதுகாத்தல் ஆகியவற்றை சொல்லி கொடுத்தேன்!

சோழர் கால தமிழ் எழுத்துகளை அச்சிட்டு (Print) மாணவர்களிடம் கொடுத்தோம், நான் சொல்லி கொடுத்த பின் அவர்களே விருப்பமாக எழுத்து கூட்டி படிக்க தொடங்கினர்!

பொன்னியின் செல்வனின் தாக்கத்தால் சிலரின் பெயர்களை அறிந்திருந்தார்கள், பொ. செ. இல் உள்ள கற்பனையை விளக்கி இவை தான் உண்மை என்று எடுத்துரைத்து வரலாற்றை விளக்கினேன்!

கல்வெட்டுகள் மட்டுமின்றி, செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், நடுகற்கள், பானை ஓடுகள் ஆகியவற்றை பற்றியும் எடுத்துரைத்து, மாணவர்கள் தங்களின் கையொப்பங்களை தமிழிலே இட வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்!

நமக்கு தெரிந்ததை, பிறருக்கு சொல்லிக்கொடுப்போம்!

வருங்கால தலைமுறையை வரலாற்றை படிக்க தொடங்கிய தலைமுறையாக மாற்றுவோம்!😊

நேற்றைய நிகழ்வு இன்றைய தமிழ் இந்து மற்றும் தினமலர் நாளிதழில் வந்துள்ளது!

பல இளம் வரலாற்று ஆய்வாளர்களை உருவாக்க வேண்டும் என்ற பெரும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம்!

இப்படி வருங்கால தலைமுறைக்கு நமது வரலாற்றை எடுத்து செல்ல உங்களால் முடிந்தால் சொல்லுங்கள் இத்தொண்டை இணைந்து செய்வோம்🙏

நன்றி

வேல்கடம்பன்

உலகளாவிய இளந்தமிழர் குழு

Like this article?

Share on Facebook
Share on Twitter
Share on Linkdin
Share on Pinterest

Leave a comment