சோழர் மற்றும் சேரர் கால கல்வெட்டுகளில் புத்தாண்டு நாள்

இரண்டாம் பராந்தகரான சுந்தர சோழரின் 12 ஆம் ஆட்சியாண்டில் ஆற்றூர் துஞ்சின சோழரான அரிஞ்சய சோழரின் தேவியாரான ஆதித்தன் கோதை பிராட்டியார் திருவனந்தீசுரத்து இறைவருக்கு

” சித்திரை விஷு ” அன்று

108 குடம் நீர் கொண்டு திருமஞ்சனம் செய்யவும், அமுது படைக்கவும் நில தானம் செய்துள்ளார் என்பதை திருவனந்தீசுரர் கோயில் கல்வெட்டின் மூலம் அறியலாம்

சேர மன்னர் பாசுகர இரவியின் நித்யாவியாரீசுரம் கோயில் கல்வெட்டு ஒன்றிலும்

” சித்திரை விழு “

குறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுகள் குறிப்பிடும் சித்திரை விழு என்பது மேழத்தில் கதிரவன் நுழையும் தருணத்தை வைத்து கணக்கிடப்படும் ஆண்டின் முதல் நாள். இதுவே புத்தாண்டு நாளாகும்!

இன்னமும் கேரளா தமிழர்களால் (இன்றைய மலையாளிகளால்) சித்திரை விழு ( இப்போது விஷு ) என்ற பெயரிலேயே வருடப்பிறப்பு நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது!

இந்த விழு என்ற சொல் சோழ நாட்டில் இன்று புழக்கத்தில் பெரிதும் இல்லாமல் (எங்கேனும் இச்சொல்லாடல் புழக்கத்தில் இருப்பின் கருத்திடவும்), அன்றைய சேர நாடான இன்றைய கேரளாவில் இன்றளவும் புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகமரபுநாள்_வாழ்த்து

தமிழ்_புத்தாண்டு

தமிழ்_வருடப்பிறப்பு

புத்தாண்டு

வருடப்பிறப்பு

சித்திரை_புத்தாண்டு

சித்திரை_விழு

படம் நன்றி: வரலாறு விரும்பிகள் சங்கம்/Varalaru Virumbigal Sangam VVS , Chakravarthi Bharati Vikraman Raman

அன்புடன்
வேல்கடம்பன்

Like this article?

Share on Facebook
Share on Twitter
Share on Linkdin
Share on Pinterest

Leave a comment