” அழிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு “

காலப்போக்கில் அழிந்தது இல்லை வேண்டுமென்றே அழிக்கப்பட்டது!

ராஜராஜர் திருவாயில் என்றழைக்கப்படும் இரண்டாம் திருவாயிலில் இடதுபுறம் கீழே பலரும் கவனிக்காத ஒரு ராஜேந்திர சோழரின் கல்வெட்டு உள்ளது.

ராஜேந்திரரின் முழு மெய்க்கீர்த்தியும் 7 வரிகளில் வெட்டப்பட்டிருக்கும் கல்வெட்டு அது.

” முரட்கடாரமும் மாப்பொருதண்டால் கொண்ட கோப்பரகேசரி பன்மரான உடையர் ஸ்ரீ ” என்று 7 ஆவது வரியில் வந்து அடுத்து 8 ஆவது வரியில் ராஜேந்திர சோழ தேவருக்கு யாண்டு என்று வந்து ஏதோ செய்தி வரவேண்டியது.

ஆனால் படுபாவிகள், வரலாற்று அழிப்பாளர்கள் அந்த 8 ஆவது வரியை அப்படியே உளி கொண்டு செதுக்கி விட்டனர்!

ஏன் இப்படி செய்யவேண்டும்? அந்த 8 ஆவது வரிக்கு கீழே இன்னும் எத்தனை வரி இருந்துச்சோ? அதுவும் இப்போ தெரியல! இல்லை இதோ தொடர்ச்சி எங்கனும் தெரியல!

வந்தவன் போனவனெல்லாம் சுவதுல கிறுக்குறது போல இல்லாமல் குறிப்பிட்டு அழிக்கப்பட்டுள்ளது. விவரம் தெரிஞ்சவன் தான் அழிச்சிருப்பான்!

இந்த கல்வெட்டு யார் காலத்தில் அழிக்கப்பட்டிருக்கும்? SII ல பதிவானதாக தெரியல(ஒருவேளை பதிவாகி இருந்தா சொல்லுங்க)

அப்படி படி எடுக்கப்பட்ட கல்வெட்டா இருந்தா பின்னர் யாரோ அழிச்சிருக்கணும்! படி எடுத்த பிறகு அழிச்சிருக்க வாய்ப்பு இல்லை, காரணம் கண்டுபித்திடலாம் அழிக்கப்பட்டிருக்குன்னு!

ஆக படி எடுக்கும் முன்பே அழிக்கப்பட்டிருக்கு! அப்போ யார் அழிச்சா மராட்டியனா!? ஏன் அழிக்கணும் எதுக்கு அழிக்கணும்!? அப்படி இருப்பின் ஏதேனும் பெரிய பெரிய நூல் எழுதிய பெரிய பெரிய ஆய்வாளர்கள் இதை பத்தி சொல்லிருக்கங்களா (சொல்லி இருந்த தெரியப்படுத்தவும் தெரிந்துகொள்கிறேன்)

இப்படி கேள்விகள் ஓடிட்டே இருக்கு! உங்கள் கருத்தையும் பதிவிடுங்க!

இதெல்லாம் போன் இருந்தா தானே படம் எடுத்து போட்டு மக்கள்ட சொல்லுவ? பிரச்னை பண்ணுவ?

அழைப்பேசிக்கு தடைய போடு!
பெரிய கோயில்ல செருப்பு வைக்கும் இடத்திற்கு எதிரே ஒரு போன் டோக்கன் முறை கடைய போடு! 😏

நன்றி
வேல்கடம்பன்

Like this article?

Share on Facebook
Share on Twitter
Share on Linkdin
Share on Pinterest

Leave a comment