கல்வெட்டிகள் படி எடுத்தல்

இன்றைய காலத்தில் தான் பழைய கல்வெட்டுகளை காகிதத்தில் படியாகவும்(estampage) அல்லது மாவு போட்டு படமாகவோ எடுத்துக்கொள்கிறோம் என்று பலர் எண்ணலாம்.

ஆனால் ஆயிரம் ஆண்டுகள் முன்பே பழைய கல்வெட்டை படி எடுக்கும் முறை இருந்தது! இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு செம்பியன் மாதேவியின் திருக்கோடிகாவல் திருபணியே!

திருக்கோடிகா கோயில் செங்கல் கோயிலாக இருந்த போது தனி கல்லில் கல்வெட்டை பல்லவர்கள் வைத்துள்ளனர்! பிறகு செம்பியன் மாதேவி அக்கோயிலை கற்றளியாக மாற்றிய போது பல பல்லவ மன்னர்களின் கல்வெட்டிகள் அழியும் நிலையில் இருந்ததால் அவற்றை தான் எடுப்பித்த கற்றளியில் படி எடுத்து மீண்டும் வெட்டியுள்ளார்!

இதை அந்த அந்த கல்வெட்டுகளிலேயே ” இதுவும் ஒரு பழங் கல் படி ” என்று சொல்லியே ஆரம்பிப்பர்!

இப்படி பல கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன!

இவை நமக்கு காட்டுவது யாதெனில் ஒரு தமிழ் அரசு வீழ்ந்து மற்றொரு தமிழ் அரசு வந்தாலும் அந்த அரசு முன்பிருந்த மன்னர்கள் கொடுத்த வரலாற்றை அழிக்கவில்லை! பாதுகாத்துள்ளார்!

நன்றி
வேல்கடம்பன்

See less

Like this article?

Share on Facebook
Share on Twitter
Share on Linkdin
Share on Pinterest

Leave a comment