தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மரபு நடை

கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தஞ்சை ஆகிய சோழரின் தலைநகரங்களை நோக்கி நமது உலகளாவிய இளந்தமிழர் குழு சார்பாக ஓர் வரலாற்று பயணத்தை கடந்த ஞாயிறு (22.01.2023) அன்று நடத்தினோம்!
65 நபர்கள் பங்கேற்றுக்கொண்ட இப்பயணத்தில் சோழரின் பெருமைமிகு திருகற்றளிகளையும், கங்கைகொண்ட சோழபுரத்து அரண்மனை எச்சங்களையும் நேரில் சென்று பார்வையிட்டோம்.

முதலில் கும்பகோணத்தில் இருந்து தொடங்கிய பயணம் கங்கைகொண்ட சோழபுரத்தில் காலை உணவு முடித்து மாமன்னர் இராசேந்திர சோழர் எடுப்பித்த கங்கைகொண்ட சோழீஸ்வரமுடையார் கோயிலில் இறைவனை வணங்கி தொடங்கினோம். முதலில் வீரராசேந்திரசோழரின் கல்வெட்டும் அதில் உள்ள செய்தியும் முக்கிய வாசங்களையும் கண்டு, பிறகு கோயிலில் உள்ள சிற்பங்கள் அவற்றின் கதைகள் ஆகியவற்றையும், மாமன்னர்கள் நான்காம் சடாவர்ம சுந்தரபாண்டியர் மற்றும் ஐந்தாம் மாறவர்ம விக்கிரம பாண்டியர் ஆகியோர் தங்களது பெயரில் சேர்ப்படுத்திய சந்தி பற்றிய கல்வெட்டுகளும், குலசேகர பாண்டியரின் கல்வெட்டும், சோழர்களை வென்று பாண்டியர் தங்களின் மீன் சின்னத்தை பொறித்து வைத்தத்தையும் மேலும் சில விஜயநகர கல்வெட்டுகளையும் வந்த மக்களுக்கு விளக்கினோம்!

பின்னர் எதிரே உள்ள அருங்காட்சியகதிற்கும், மாளிகைமேடு அகழாய்வு தளத்திற்கு சென்று அங்குள்ள சோழர் கால தொல்லியல் எச்சங்கள் சார்ந்து விளக்கினோம்!

பின்னர் நமது குழுவினர் நண்பர் ஆனந்த் அவர்கள் தான் சேகரித்த பண்டைய பொருட்களை காட்சிப்படுத்தினார்.

பிறகு மதிய உணவு முடிந்து சோழ கங்கம் ஏரியை கண்டு கடந்து தஞ்சை நோக்கி பயணித்து, மாமன்னர் இராசராச சோழர் எடுபிச்ச திருகற்றளியாம் ராஜராஜீஸ்வரமுடையார் கோயிலில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல கல்வெட்டுகளை விளக்கினோம்! தஞ்சை கோயில் சுற்றி உலாவரும் தவறான பொய்யான கருத்துகளையும், தஞ்சை கோயில் சார்ந்து இருக்கும் ஆய்வுகள் மற்றும் அதில் ஒவ்வொரு ஆய்வாளருக்கு இருக்கும் மாற்றுகருத்துகள் போன்ற பலவற்றை கலந்துரையாடினோம்!

இப்பயணத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆகிய பகுதிகளில் இருந்து 65 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வரலாறு அறிந்தனர்!

ஆந்திராவில் இருந்து நமது பயணத்தில் இணைந்தவருக்கு நான் ஆங்கிலத்தில் விளக்கியதை கண்டு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை பற்றி 150 கர்நாடக மாநில
மாணவர்களுக்கு விளக்க கேட்டனர்! அவர்களுக்கும் இக்கோயிலை பற்றியும் தமிழ் பேரரசுகள் விளக்கி கூறினேன்!

நமக்கு தெரிந்த வரலாற்றை மற்றவருக்கு சொல்லிக்கொடுப்போம்!

இப்பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து நல்லுங்களுக்கும் சான்றோருக்கும் நன்றிகள்!🙏

பயணம் முழுதும் உடனிருந்து அழகிய புகைப்படங்களை எடுத்து தந்த நமது குழுவினர் நண்பர் கோகுல் ( Gokul Nath ) அவர்களுக்கு நன்றி.

உலகளாவிய இளந்தமிழர் குழுவின் பயணம் தொடரும்…

நன்றி
வேல்கடம்பன்
தலைவர்
உலகளாவிய இளந்தமிழர் குழு

Like this article?

Share on Facebook
Share on Twitter
Share on Linkdin
Share on Pinterest

Leave a comment